Saturday, 5 September 2020

Time Cycle - Series - Episode 2

👀 Episode 1 will be in english You can find it in https://www.youtube.com/watch?v=S1bFeGN2Eak&feature=youtu.be Episode 2 Year 3100+


நம்ம A² பள்ளி கூடத்துக்கு போற டைம். 


A:  கண்ணா A² , சீக்கிரம் ரெடி ஆகு.. ஸ்கூல் போக டைம் ஆச்சு பாரு. 


A: 2A, இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தம்பி A²அ  உன்னோட கார்ல கூட்டிட்டு போறியா?. 


2A: அவன் கார் என்னாச்சு?


A: தம்பியோட வண்டில fuel fill பண்ணனும். அது முடிச்சுட்டு ஸ்கூல் போக லேட் ஆகும்.


2A: நோ அப்பா. அவனுக்கும் எனக்கும்   சண்டை. அவன் வர வரைக்கும் வெயிட் பண்ண முடியாது. 


டார்கெட் லொகேஷன் ஸ்கூல் செட் பண்ணிட்டு, auto-pilot mode போட்டதும் கார் ஸ்லோவா மூவ் ஆகுது. 


2A: bye பா..👋🏽


A: ஹ்ம்ம் bye..👋🏾


இதை எல்லாம் கேட்டுட்டே A² shoe மாட்டிகிட்டு இருக்கான். 


அவன் இவ்ளோ கோபப்படுற அளவுக்கு நா எதுவும் பண்ணலயே..


A to A²


A: சரி நீ fuel fill பண்ணிட்டு அப்புறமா ஸ்கூல் போ.. நா உன் டீச்சர் கு இன்ஃபார்ம் பண்ணிக்குறேன். 


--------------------------------------

அடுத்த நாள்:

சனிக்கிழமை


க்லிங்.... க்லிங்.....


காலிங் பெல்!!. 


A² அவன் பெட் பக்கத்துல இருக்க மினி ஸ்க்ரீன் ல பாக்குறான்.

டோர் கேமிரா சென்ஸார் Age அ predict பண்ணுது .. 32-35. 


ஒரு ஆள் நிக்குறார். A² அவனோட ஸ்க்ரீன் ல 'Search more' ஆப்ஷன க்ளிக் பண்றான்.


Loading.. 



A கதவ ஓபன் பண்றார்.


A: ஹாய்.. வாங்க Mr.மணி.


--+----------+---


A² ஸ்க்ரீன் ல டேட்டா லோட் ஆகிடுச்சு..


Name: ManiMaaran

Age: 34

Date of birth: 12-11-3068

Profession: Friendship broker.

Website: httpss://linktohiswebsite.com

Address:

.............

.............


A² கு இந்த வேலை பத்தின எல்லாமே புதுசா இருக்கு..


ஹால்ல Mr.மணி & A :

====================


மணி: மேடம் இல்லையா சார்.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.


A: மேடம் work related ah துபாய் போய்ருக்காங்க. அவங்க வரதுக்கு 4 மாசம் ஆகும்.


மணி: உங்க பெரிய பையன் 2A 4th standard போய்டானு

கவர்மெண்ட்& ஸ்கூல் database ல பாத்தேன். அதான் சார் வந்தேன்.


என்கிட்ட அவரு ஜாதகம் மேட்ச் ஆகுற மாதிரி friends ப்ரொஃபைல்ஸ் இருக்கு. 


நீங்க பாத்து செலக்ட் பண்ணிட்டா போதும், friendship ceremony வெச்சுக்கலாம்.

இப்போ 12% discounts போய்ட்டு இருக்கு.



A: ஓ..குட்.. ஃபோட்டோஸ் லாம் எங்க ஃபேமிலி மெயில்கு அனுப்பிடுங்க.

நா wife கிட்ட பேசிட்டு எங்க முடிவு  சொல்றேன்.


Dining robot வந்து ஜூஸ் குடுக்குது. 


மணி சார் ஜூஸ் குடிச்சுட்டு அடுத்த கஸ்டமர் வீட்டுக்கு போறார்.



A² குளிச்சு, breakfast முடிச்சுட்டு டிவி பாத்துட்டு இருக்கான். 


வீட்டுக்கு வெளிய கார் பார்க்கிங் சத்தம் கேக்குது..


2A பேட்மிண்டன் practice போய்ட்டு வீட்டுக்கு வரான்.


A to 2A: freshen up ஆகிட்டு வா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.


2A: சரி பா.


ஒரு மணி நேரத்துக்குப் பின்.


A to 2A:

உனக்கு இதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸ் வேணும் இல்லையா. 


ப்ரோக்கர் அங்கிள் வந்தார். ப்ரொஃபைல்ஸ் குடுத்துட்டு போய்ருக்கார் ..

நானும் அம்மாவும் பேசி உனக்கு friends செலக்ட் பண்ணிருக்கோம். 

நீ அதுல யாராவது செலக்ட் பண்ணிக்கோ..


2A: என்ன சொல்றீங்க? இதுக்கெல்லாமா ஆள் இருக்காங்க. 


A: செலக்ட் பண்ணிருக்க எல்லா ப்ரொஃபைல்ஸும் 90% + ஜாதகம் மேட்ச்.

கண்டிப்பா நல்லாருக்கும்.


2A: எனக்கு இது வேண்டாம். நா ரூம்க்கு போறேன். 


A: எங்க போற? ஒன்னு செலக்ட் பண்ணிட்டு போ..


2A: பா.. எனக்கு ஆல்ரெடி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. 


A(angrily): உன்னைய ஸ்கூல் கு படிக்க அனுப்புனா, நீ தேவையில்லாத வேலைலாம் பாத்துருக்க..


இது மட்டும் உங்க அம்மாக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்.


2A: இத ஏன் பா அவ்ளோ சீரியஸ் ஆ எடுத்துக்றீங்க. 


A: நம்ம circle ல எல்லாரும் ஃபாலோ பண்றது இது. காலங்காலமா இப்படி தான் நடக்குது. 


நீ ஸ்கூல் போனதெல்லாம் போதும். 


A²: அப்பா, அவன் சொல்றது தப்பில்லயே. 


A: நீ சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாது.


2A: நானே ஒருத்தர என்னோட ஃப்ரெண்ட் னு சொன்னா, "பேசக்கூடாது , ஸ்கூல் போகாதனு" சொல்றீங்க.


அதே ஆள அந்த மணி அங்கிள் சொன்னா அவங்க கூட என்னைய ஸ்கூல் கு அனுப்பி வெப்பீங்க.


A: இப்படி பொருத்தம் எல்லாம் பாக்காம அவங்களே friend தேடி போனவங்க கதை எல்லாம் உனக்கு தெரில.


2A: இந்த மேட்ச் எல்லாம் பாத்துதான அம்மாக்கு Xyz  ஃப்ரெண்ட் ஆனாங்க. அவங்க அம்மாவ பிஸ்னஸ் ல ஏமாத்துனாங்களே.


A: நீங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் சரி, நமக்குன்னு ஒரு culture இருக்கு, அது சொல்ற மாதிரி தான் நடக்கனும்.


---------------

நைட் 9:30

2A எதோ ஒரு சத்தம் கேட்டு பக்கத்து ஸ்டோர் ரூம் போறான்.

அங்க A² சேர் மேல ஏறி அப்பாவோட லாக்கர் எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கான்‌ 


A²: நீயா? கொஞ்சம் பயந்துட்டேன். 


2A: சாரி டா. நேத்து உன்ன என் வண்டில ஸ்கூல்கு கூட்டிட்டு போக மாட்டேன் னு சொல்லிட்டேன்.


A²: அத விடு.. மேல ஏறி ஒரு key மட்டும் எடுத்துக் குடு. உனக்காக தான்.


2A: சரி. என்ன key அது?


A²: Time machine cycle 💥


2A: பாஸ்வேர்டு?


A²: ...---****


A²: நா போய் அப்பா சொன்ன மாதிரி தான் முன்னாடி காலத்துல எல்லாம்  இருக்காங்களா இல்லையா னு  ரெக்கார்ட் பண்ணிட்டு வரேன்.


இதோ வீடியோ கேமிரா.


2A: அந்த சைக்கிள் நெஜமாவே டைம் மெஷின் தானா?  😀😀. நானும் வர்றேன்.



A²: நேத்து என்ன விட்டுட்டு போன.. இன்னிக்கு என்னோட டைம்.


2A: 🙄 டேய்.. 


A²: அதுக்கில்ல டா.. அப்பா எழுந்தா, இங்க இருந்து எனக்கு அலர்ட் குடுக்க ஒரு ஆள் வேணும். 


இந்தா வாட்ச்.. இத எடுத்துட்டு அந்த கார்னர் ல இருக்க புக் ஷெல்ப் கிட்ட

போனா சிக்னல் கெடைக்கும். இந்த blue பட்டன் க்ளிக் பண்ணா எனக்கு அலர்ட் வரும்..


A² சைக்கிள் எடுத்து ஸ்க்ரீன் ல destination year குடுக்குறான்.


2A: Be safe டா.. சீக்கிரம் வா‌..


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


🌪️🌪️🌪️


A² சைக்கிள் ல திரும்ப வந்தாச்சு..

...............


2A: என்னாச்சு?


A²: சக்சஸ் ...உனக்கு favour ah தான் எல்லாமே இருக்கு ..


÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

அடுத்த நாள் காலை பத்து மணி போல:


2A: அப்பா உங்க கூட கொஞ்சம் பேசணும். 


A: சொல்லு...


2A: இந்த hard disk ஃபுல்லா 2000-2015 ல வாழ்ந்த வேற வேற எடத்துல இருந்த 30 பேரோட கம்ப்ளீட் லைஃப் இருக்கு. 


நீங்க சொன்ன மாதிரி ஒரு process eh இல்ல அப்போ.


A: A² இங்க வா.. சும்மாவே இருக்க மாட்டியா நீ..


2A: அவன ஏன்பா திட்றீங்க? நம்மல ஒருத்தன் ரொம்ப நாளா ஏமாத்துறான்னு

ப்ரூஃப் குடுத்தா ஏமாத்துனவன் மேல கோபப்படுவீங்களா ?

இல்ல ப்ரூஃப் குடுத்தவன மேல கோபப்படுவீங்களா?


A²: நல்ல வேல.. சப்போர்ட்கு அண்ணன் இருக்கான். 😎.


A: சரி .. அந்த ரெக்கார்டிங்ஸ் எல்லாம் காட்டு.. 


ஒரு பத்து பேரோட லைஃப் பாத்து முடிச்சதும்..



2A: நீங்க சொல்ற process சரி தப்புன்னு லாம் தெரியல..

மத்த process எல்லாம் நீங்க சொல்றதுக்கு equal ah normalise பண்ணா போதும்.


A: பெரு மூச்சு விட்டார்..

என்னால முழுசா சரி னு சொல்ல முடியல. நீ சொன்னது பத்தி யோசிச்சு பாக்குறேன். 

 

2A: லவ் யூ பா..


A²: டேய் அண்ணா நானும்..


A: நா இன்னும் ஓகே வே சொல்லலையே‌‌…


2A: யோசிக்றேனு சொன்னதே போதும். உங்க மேல நம்பிக்கை இருக்கு. 


  

A: இந்த புது process எப்டி நடுவுல வந்துச்சுனு தெரியுமா??..


A²: அத கண்டு புடிக்கதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..


back and forth நெறைய ட்ராவல் பண்ண வேண்டி இருந்துச்சு..



2020 ல இது மாதிரி processலாம் வெச்சு ஒருத்தன் கற்பனையா கதை எழுதிருக்கான். 


அடுத்து வந்தவங்க அந்த process நல்லாருக்கே னு ஸ்டார்ட் பண்ணிட்டாங்க..


A: அப்போ அவன் கைய ஒடிச்சு கதை எழுதாத மாதிரி உக்கார வெச்சா இதெல்லாம் நடக்காதுல்ல?


2A: நானும் கூட வரேன்...



 ............Time Cycle Started.........



Got to hide 💥🏃‍♂️


Thursday, 6 November 2014


Happy Birthday Abi :) :)

வாழ்த்த வயதில்லை, So வழக்கம் போல
தெரியாம ஆசீர்வாதம் வாங்கிக்றோம் ;) :) .